துரித கதி
பாஸ்ட் ட்ரெக் என்பது வாடிக்கையாளர்களின் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய கால சுழலும் கடன் வசதியாகும், இதில் பணி மூலதனத் தேவைகளும் அடங்கும். வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் திரட்டு வட்டியை மாதாந்த தவணையாக செலுத்த வேண்டும். அசல் தொகையை கடன் மீள செலுத்தும் காலத்தில், எந்த நேரத்திலும் எவ்வித கட்டணமும் இன்றி, பகுதியளவில் அல்லது முழுமையாக செலுத்தலாம். வசதி காலத்தில், வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப, அங்கீகரிக்கப்பட்ட வசதி வரம்பிற்கு உட்பட்டு, பணம் செலுத்தக் கோரலாம். பொருத்தமான கட்டணங்களை செலுத்தி, முதிர்வுக்கு முன்னதாகவே வசதி தொகையையும் செலுத்த முடியும்.
முன்கூட்டிய கடன் மீள் செலுத்தல் கட்டணம்
கடன் ஒப்பந்த திகதியில் இருந்து ஆறு (6) மாதங்களுக்குள் பாஸ்ட் ட்ரெக் கடன் முழுமையாக செலுத்தப்பட்டால், கடன் தொகையில் 2% முன்கூட்டிய தீர்வு கட்டணமாக செலுத்தப்படவேண்டும்.
பிரதிபலன்கள்
- ஒரே முறையில் முழு கடன் தொகைக்குமாக அனுமதி பெறுதல் அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான தவணைக் கடன்கள்.
- அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை பிணையாக வைக்க முடியுமானவர்களுக்கு நிலையான வட்டி விகிதாசார அடிப்படையில் கடன்கள்.
- குறைந்தது ரூபா. 100,000/- முதல் ஆகக்கூடிய கடன் தொகை அவர்களினால் திருப்பிச் செலுத்தும் தகைமைகளின் அடிப்படையில், வாடிக்கையாளரின் வருமானத்திற்கேற்ப மற்றும் பிணைப் பெறுமதியினடிப்படையில் அதிகரித்துச்செல்லும்.
- திருப்பிச்செலுத்தும் வட்டித்தொகை மற்றும் மூலதனத்தொகை வாடிக்கையாளரின் வருமானத்துக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
- மாதாந்த தவணைப் பணத்தை மீளச்செலுத்தும் போது தவணைப் பணத்தை விட மேலதிகமாகச் செலுத்தப்படின் மேலதிகமாகச் செலுத்திய பணம் செலுத்த வேண்டிய பிரதான கடன் தொகையிலிருந்து கழிக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய மாதாந்த தவணைப் பணம் குறைவடையும்.
- தனிப்பட்ட/கூட்டு அல்லது கூட்டுத்தாபனமாகவும் விண்ணப்பிக்கலாம்.

